குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகள் கேள்வி
நாமக்கல் மாவட்டத்தில் வருகிற மாதங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலாளருமான தயானந்த் கட்டாரியா தலைமையில் நடைபெற்றது.
பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதித்திட்டம் மற்றும் ஏழைத்தொழிலாளர் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதிஉதவி வழங்கும் திட்டங்களின் நாமக்கல் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் குமரகுருபரன், கலெக்டர் ஆசியா மரியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தயானந்த் கட்டாரியா, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் வருகிற மாதங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு உள்ள நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றி கேள்வி எழுப்பினார். தெருவிளக்குகளின் இயக்கம் குறித்தும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இதேபோல் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதித்திட்டம் மற்றும் ஏழைத்தொழிலாளர் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதிஉதவி வழங்கும் திட்டங்களின் பயனாளிகளின் விவரங்கள் இணையதளத்தின் மூலம் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து குமரகுருபரன் ஆய்வு செய்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மாலதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்சிலி ராஜ்குமார், குடிநீர் வழங்கல்துறை, நகராட்சி, பேரூராட்சித்துறை, வளர்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story