பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்


பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 19 Feb 2019 10:45 PM GMT (Updated: 19 Feb 2019 7:56 PM GMT)

பெரம்பலூர் மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்க கிளை செயலாளர் ஜெகநாதன் தலைமையில், ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், 4-ஜி சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், கூட்டமைப்பினர் 3 நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி 2-வது நாளான நேற்று பெரம்பலூர் மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்க கிளை செயலாளர் ஜெகநாதன் தலைமையில், ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story