மாவட்ட செய்திகள்

மதுரையில் அடகுக் கடையை உடைத்து துணிகரம்: 11¼ கிலோ தங்க நகைகள் கொள்ளை + "||" + Gold jewelery robbed in Madurai's pawn shop

மதுரையில் அடகுக் கடையை உடைத்து துணிகரம்: 11¼ கிலோ தங்க நகைகள் கொள்ளை

மதுரையில் அடகுக் கடையை உடைத்து துணிகரம்: 11¼ கிலோ தங்க நகைகள் கொள்ளை
மதுரையில் அடகுக் கடையை உடைத்து 11¼ கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
மதுரை,

மதுரை அழகர்கோவில் ரோட்டைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது 61). இவர் உள்பட 4 பேர் சேர்ந்து, நரிமேடு மருதுபாண்டியர் நகரில் உள்ள ஒரு வீட்டில் நகை அடகுக்கடை நடத்தி வருகின்றனர்.

நேற்று காலை கோபிநாத் கடையை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றார். பின்னர் மாலையில் கோபிநாத்தின் மகன் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைக்கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.


பின்னர் அவர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது, லாக்கர்களில் வைத்திருந்த நகைகள் அனைத்தும் கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது. உடனே இது குறித்து அவர் தனது தந்தைக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு தல்லாகுளம் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் கடைக்குள் சென்று ஆய்வு செய்தனர்.

கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் கடையின் கதவு, லாக்கர்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த நகைகள் கொள்ளையடித்தது தெரிய வந்தது. சுமார் 11¼ கிலோ தங்க நகைகள் கொள்ளை போயிருக்கலாம் என்று தெரியவருகிறது.

பின்னர் போலீசார் கடையில் கண்காணிப்பு கேமராக்கள் இருக்கிறதா என்று ஆய்வு செய்த போது, கடையில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லை. ஆனால் இவர்களது கடைக்கு எதிரே உள்ள கடையில் 2 கண்காணிப்பு கேமராக்கள் இருந்தன. அந்த கேமராக்களை கொள்ளையர்கள் வேறு திசையில் திருப்பி வைத்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதும் தெரிய வந்தது.

மேலும் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், மூகமுடி அணிந்தபடி 2 பேர் மினி சரக்கு வேனில் வந்து, இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திச்சென்றிருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்து வருகின்றனர். மோப்பநாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிவிட்டு திரும்பி வந்துவிட்டது.

சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், துணை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். சம்பவத்தை தொடர்ந்து நகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். முக்கிய சாலைகள் மற்றும் நகரில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகிறார்கள்.

அடகுக்கடையை உடைத்து 11¼ கிலோ தங்க நகைகளை முகமூடி கும்பல் கொள்ளையடித்துச் சென்ற துணிகர சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டாஸ்மாக் ஊழியரை வெட்டி ரூ.5¼ லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.5¼ லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. சாலை ஆய்வாளர் வீட்டில் 25 பவுன்-ரூ.17 ஆயிரம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
மன்னார்குடியில் சாலை ஆய்வாளர் வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் நகைகளையும், ரூ.17 ஆயிரத்தையும் கொள்ளையடித்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் கொள்ளை போன அரிய நூல் குறித்து ஊழியர்களிடம் 5 மணி நேரம் விசாரணை
தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் கொள்ளை போன அரிய நூல் குறித்து ஊழியர்களிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
4. சேலையூர் அருகே துணிகரம் ஆடிட்டர் வீட்டில் 35 பவுன் நகை –பணம் கொள்ளை
சேலையூர் அருகே ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
5. கொள்கைகளுக்கானது அல்ல: அ.தி.மு.க.-பா.ஜனதா கொள்ளை கூட்டணி கி.வீரமணி கடும்தாக்கு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொள்கைகளுக்காக அல்லாமல் அ.தி.மு.க.-பாரதீய ஜனதா கொள்ளை கூட்டணி அமைத்துள்ளதாக கி.வீரமணி கூறினார்.