லாஸ்பேட்டையில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை கடன் பிரச்சினையால் பரிதாப முடிவு

லாஸ்பேட்டையில் கடன் பிரச்சினையால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புதுச்சேரி,
புதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகர் ராமதாஸ் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39). ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 2002-ம் ஆண்டு பிரிவில் போலீஸ் காரராக பணியில் சேர்ந்தார். இவருக்கு சவிதா என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஏலச்சீட்டு மோசடியில் சுரேஷ் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அவர் போலீஸ் பணியில் சேர்ந்தார். ஏலச்சீட்டு மோசடி வழக்கு தற்போது புதுவை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
சுரேஷ் கடன் பிரச்சினையிலும் சிக்கி தவித்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக பணிக்கு செல்லாமல், விரத்தியுடன் இருந்தார். நேற்று மதியம் எடையன் சாவடி சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்த பொதுமக்கள், லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story