வானவில் : சாம்சங்கின் 2 புதிய ஸ்மார்ட்போன்கள்
சாம்சங் நிறுவனம் சீனாவின் ஜியோமி, ஓப்போ போன்றவற்றின் போட்டிகளை சமாளிக்க குறைந்த விலை ஸ்மார்ட் போன்களை தயாரித்து இந்திய சந்தையில் தனது முன்னிலையை தக்க வைத்துக் கொள்வதில் தீவிரம் காட்டி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கேலக்ஸி எம் சீரிஸில் புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம் 20 என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் விற்பனையகங்கள் மட்டுமின்றி அமேசான் இணையதளம் வழியாகவும் தனது விற்பனையை தொடங்கிஉள்ளது சாம்சங்.
பட்ஜெட் ஸ்மார்ட்போன்களாக சந்தையைக் கலக்கி வரும் ரெட்மி, ரியல்மி மற்றும் அசுஸ் ஆகிய மாடல்களுடன் ஒப்பிடுகையில் சாம்சங்கின் செயல்பாடு சற்று மேம்பட்டதாகவே உள்ளது. இவ்விரு மாடல்களும் சாம்சங்கின் உத்தி சார்ந்த அணுகுமுறைக்கு மிகப்பெரும் வெற்றியைத் தேடித் தரும் என்பதில் சந்தேகமில்லை.
சாம்சங் கேலக்ஸி எம் 10 மாடலில் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் உள்ளது. 6.2 அங்குல தொடுதிரையைக் கொண்ட இது இதன் பின்பகுதியில் 13 மெகாபிக்ஸெல் மற்றும் 5 மெகா பிக்ஸெல் கொண்ட இரட்டை கேமரா உள்ளது. முன்பகுதியில் 5 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது.
கேலக்ஸி எம் 10 மாடலின் விலை ரூ.7,990. இது 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதில் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை ரூ.8,990 ஆகும்.
சாம்சங் கேலக்ஸி 20 மாடல் இரட்டை சிம் (நானோ) வசதி கொண்டது. இதில் ஆண்ட்ராய்டு ஒரியோ அடிப்படையிலான 9.5 யு.எக்ஸ். சாம்சங் செயல்பாட்டை கொண்டது. 6.3 அங்குல தொடு திரையில் முழுவதுமான டிஸ்பிளே கொண்டது. பின்பகுதியில் இரட்டை கேமரா உள்ளது.
ஒன்று 13 மெகா பிக்ஸெல் மற்றொன்று 5 மெகா பிக்ஸெலை கொண்டது. செல்பி பிரியர்களுக்காக 8 மெகா பிக்ஸெல் கேமரா முன் பகுதியில் உள்ளது.
விரல் ரேகை பதிவு மூலம் போனை ஆன் செய்யும் வசதி கேமராவின் பின்பகுதியில் உள்ளது. அதேபோல முகத்தை அடையாளம் கண்டு செயல்படும் வசதியும் உள்ளது.
இதில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இது விரைவாக சார்ஜ் ஆகும். கேலக்ஸி எம் 20 மாடல் போனின் விலை ரூ.10,990 ஆகும். இது 3 ஜி.பி. ரேம் மற்றும் 32 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதில் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின்விலை ரூ. 12,990 ஆகும்.
Related Tags :
Next Story