மாவட்ட செய்திகள்

கார் மோதி தொழிலாளி பலி குடிநீர் பிடித்து வந்த போது பரிதாபம் + "||" + When the car collision worker was drinking water, it was awful

கார் மோதி தொழிலாளி பலி குடிநீர் பிடித்து வந்த போது பரிதாபம்

கார் மோதி தொழிலாளி பலி குடிநீர் பிடித்து வந்த போது பரிதாபம்
மார்த்தாண்டம் அருகே வீட்டுக்கு தேவையான குடிநீரை பிடித்து வரும்போது, கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே உள்ள பம்மம் வலியகாட்டுவிளையை சேர்ந்தவர் முருகன் (வயது 52), தச்சுத்தொழிலாளி. இவருக்கு சிந்து என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

முருகன் வேலைக்கு செல்வதற்கு முன் வீட்டுக்கு எதிரே உள்ள வேறொருவர் வீட்டில் குடிநீரை பிடித்து வருவது வழக்கம். அதே போல் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் குடிநீரை குடத்தில் பிடித்துக்கொண்டு முருகன் சாலையை கடக்க முயன்றார்.


அப்போது அந்த வழியாக கார் ஒன்று      வேகமாக வந் தது. கண் இமைக்கும் நேரத்தில் கார் முருகன் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட  முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. திருத்துறைப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி சமையல்காரர் பலி
திருத்துறைப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி சமையல்காரர் பலியானார்.
2. திருவட்டார் அருகே பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; மாணவர் பலி
திருவட்டார் அருகே பஸ்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாணவர் பரிதாபமாக இறந்தார்.
3. பரமக்குடியில் கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: தொழில் அதிபர்- மகள்கள் உள்பட 4 பேர் பலி
கார்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் ராமநாதபுரம் தொழில் அதிபர், அவருடைய 2 மகள்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
4. துறையூர் அருகே கோவில் விழாவுக்கு சென்றபோது பரிதாபம் கிணற்றுக்குள் வேன் கவிழ்ந்து 8 பேர் பலி
திருச்சி மாவட்டம் முசிறி அருகே பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசீலன் (வயது 63). இவர் திருச்சி மத்திய சிறையில் வார்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
5. காங்கேயம் அருகே சிமெண்டு கலவை எந்திர வாகன சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி
காங்கேயம் அருகே சிமெண்டு கலவை எந்திர வாகன சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலியானார்.