மாவட்ட செய்திகள்

திருமணத்துக்கு மறுத்ததால் காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சி + "||" + A young woman suicide before a boyfriend's house because she refused to marry

திருமணத்துக்கு மறுத்ததால் காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சி

திருமணத்துக்கு மறுத்ததால் காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சி
திருமணத்துக்கு மறுத்ததால் காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
கடமலைக்குண்டு,

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள பொன்னார் கிராமத்தை சேர்ந்தவர் நந்தினி (வயது 25). இவர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தார். அதே கல்லூரியில், தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் (27) என்பவரும் படித்தார்.

இவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். கல்லூரி படிப்பு முடிந்து 2 பேரும் அவரவர் கிராமங்களுக்கு சென்று விட்டனர். இந்தநிலையில் குமணன்தொழு கிராமத்தில் உள்ள ரஞ்சித் வீட்டுக்கு நந்தினி வந்தார். ரஞ்சித்தை சந்தித்த அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.

அப்போது, தனது தங்கை திருமணம் நடைபெற இருப்பதாகவும் அது முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்வதாகவும் ரஞ்சித் தெரிவித்தார். ஆனால் இதனை நந்தினி ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னை திருமணம் செய்ய ரஞ்சித் மறுப்பதாக நந்தினி நினைத்தார். இதனையடுத்து, தான் கொண்டு வந்த பூச்சி மருந்தை (விஷம்) ரஞ்சித் வீட்டின் முன்பு வைத்து நந்தினி குடித்தார். சிறிதுநேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடமலைக்குண்டுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நந்தினி மீது தற்கொலைக்கு முயன்றதாக மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பழனியில், ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற கேரள வியாபாரி
பழனியில், ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற கேரள வியாபாரியை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
2. கேரளாவில் ஆளுங்கட்சி அலுவலகத்திற்குள் இளம்பெண் பாலியல் பலாத்காரம்; விசாரணை தீவிரம்
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்திற்குள் நடந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் பற்றி போலீசார் விசாரணை நடந்து வருகிறது.
3. பிரசவம் நடந்த சிறிது நேரத்தில் இளம்பெண் திடீர் சாவு
பிரசவம் நடந்த சிறிது நேரத்தில் இளம்பெண் திடீர் சாவு ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகை.
4. பட்டப்பகலில் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபர் கைது
கேரளாவில் பட்டப்பகலில் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபரை போலீஸ் கைது செய்தது.
5. ஏமாற்றிய காதலனை திருமணம் செய்து வைக்க கோரி மகளிர் போலீஸ் நிலையம் முன் இளம்பெண் தர்ணா
தன்னை காதலித்து ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு இளம் பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.