தூத்துக்குடியில் அ.ம.மு.க.வினர் நூதன போராட்டம்
தூத்துக்குடியில் அ.ம.மு.க.வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி டூவிபுரம் 2-வது தெருவில் புதிதாக தாலுகா அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது.
அதன் அருகே உள்ள பள்ளமான பகுதியில் நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நேற்று காலை நாற்று நடுதல் மற்றும் கப்பல் விட்டு நூதன போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு வட்ட செயலாளர் காசிலிங்கம் தலைமை தாங்கினார்.
தொடர்ந்து கட்சியினர் தேங்கிய தண்ணீரில் இறங்கி நாற்றுக்களை நட்டனர்.
பின்னர் காகித கப்பல்களை விட்டு போராட்டம் நடத்தினர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் துணை செயலாளர் வேல்சாமி, இணை செயலாளர் மணி, வட்ட பிரதிநிதி சொக்கலிங்கம், நயினார், ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story