ஆத்தூர், ஓமலூரில் துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி


ஆத்தூர், ஓமலூரில் துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
x
தினத்தந்தி 21 Feb 2019 3:00 AM IST (Updated: 21 Feb 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர், ஓமலூரில் துணை ராணுவ வீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆத்தூர், 

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலியான துணை ராணுவ வீரர்களுக்கு ஆத்தூர் பஸ் நிலையம் எதிரில் அவர்களது உருவப்படம் இருந்த பேனர் வைக்கப்பட்டு அனைத்துக்கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயா, போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ், நகர செயலாளர் குமரன், அரிமா சங்கத்தைச் சேர்ந்த பாஸ்கரன், சரவணன் மற்றும் அனைத்துக்கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.

ஓமலூர் பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை அருகில் த.மா.கா. சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயிர் நீத்த வீரர்களின் படங்கள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் தலைமை தாங்கினார். ஓமலூர் வட்டார தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் த.மா.கா. மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் ரகு நந்தகுமார், நகர தலைவர் மணிகண்டன், கோவிந்தன், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திரளான பொதுமக்களும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் தலைமையில் அனைத்து கட்சியினர், ஊர்பொதுமக்கள் இணைந்து மேச்சேரி பஸ் நிலையத்தில் ராணுவ வீரர்களின் உருவப்படத்துக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து மேச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி தர்மபுரி சாலை, சேலம் சாலை வழியாக மேச்சேரி பஸ் நிலையத்தை வந்தடைந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகில் உள்ள யுனிவர்சல் மருத்துவமனை வளாகத்தில் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜரத்தினம் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

Next Story