நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மத்தியில் அமையும் கூட்டணி ஆட்சியில் அ.தி.மு.க. முக்கிய பங்கு வகிக்கும் தம்பிதுரை பேட்டி
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மத்தியில் அமையும் கூட்டணியில் அ.தி.மு.க. முக்கிய பங்கு வகிக்கும் என கரூரில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
கரூர்,
வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மத்தியில் கூட்டணி ஆட்சி தான் அமையும். இந்த கூட்டணி ஆட்சியில் அ.தி.மு.க. முக்கிய பங்கு வகிக்கும். இதுவரை மத்திய அரசில் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக செயல்பட்டது. அதனால் தான் தமிழகத்திற்கு தேவையான நிதிகளை கேட்டு கொண்டே இருந்தோம். இனி அந்த நிலை மாறி வாங்கும் சூழல் ஏற்படும்.
இதுவரை மத்திய அரசு ரூ.20 ஆயிரம் கோடி தமிழகத்திற்கு தர வேண்டி உள்ளது. இனி ரூ.50 ஆயிரம் கோடி கூட கேட்டு பெற முடியும். அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி குறித்து திருநாவுக்கரசர் சொல்வதற்கு அவர் எந்த பதவியிலும் இல்லை. அதனால் அவர் கூறும் கருத்தை ஏற்க இயலாது. தற்போது அமைந்துள்ள கூட்டணி வெற்றி பெற்ற பிறகு இலங்கை தமிழர் பிரச்சினையில் தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடன் இருந்தார்.

Related Tags :
Next Story