மாவட்ட செய்திகள்

தஞ்சையில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் 620 மாணவ, மாணவிகள் பங்கேற்பு + "||" + 620 students and students participated in the district level sports tournaments in Tanjore

தஞ்சையில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் 620 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

தஞ்சையில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் 620 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
தஞ்சையில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தது. இதில் 620 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட அளவிலான உலக உடற்திறனாய்வு விளையாட்டு போட்டிகள் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இதில் 100, 200, 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து 225 பள்ளிகளை சேர்ந்த 620 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். இதில் முதல் 10 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தலா ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, பயிற்றுனர்கள், மாணவ, மாணவிகள், உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வடுவூர் அருகே மாநில அளவிலான கைப்பந்து போட்டி அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்
வடுவூர் அருகே மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் அரை இறுதி போட்டியை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.
2. வேலூர் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டி: சீமான்
வேலூர் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுவார் என சீமான் அறிவித்துள்ளார்.
3. மின்வாரிய விளையாட்டு போட்டிகள் தொடக்கம்: ஆக்கி போட்டியில் திருச்சி, சென்னை அணிகள் அரையிறுதிக்கு தகுதி
மின்வாரிய மண்டலங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் திருச்சியில் தொடங்கியது. ஆக்கி போட்டியில் திருச்சி, சென்னை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
4. திருச்சி கோளரங்கத்தில் மாணவ-மாணவிகளுக்கு எந்திரனியல் பயிற்சி
திருச்சி கோளரங்கத்தில் மாணவ-மாணவிகளுக்கு எந்திரனியல் பயிற்சி தொடங்கியது.
5. அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்
குமரி மாவட்ட அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்.