விருதுநகர் சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.30 ஆயிரம் சிக்கியது


விருதுநகர் சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.30 ஆயிரம் சிக்கியது
x
தினத்தந்தி 23 Feb 2019 5:08 AM IST (Updated: 23 Feb 2019 5:08 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரிலுள்ள சமூகநலத்துறை அலுவலகத்திலும் ராஜபாளையத்திலுள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இரு இடங்களிலும் ரொக்கம் சிக்கியது.

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு சிவகங்கை மாவட்ட லஞ்சஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, இன்ஸ்பெக்டர் விமலா ஆகியோரது தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி ராஜம் உள்ளிட்ட 6 அலுவலர்கள் அங்கு இருந்தனர். சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.29 ஆயிரத்து 70 சிக்கியது. இதனை தொடர்ந்து ரொக்கம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராஜபாளையம் காந்திசிலை ரவுண்டானா அருகே தொழிலாளர் நலத்துறை அலுவலகம் உள்ளது. இங்கும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.48 ஆயிரம் பிடிபட்டது. அதனையும் ஆவணங்களையும் கைப்பற்றினர். உதவி ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மாலை தொடங்கிய சோதனை இரவிலும் நீடித்தது.


Next Story