திருவாரூர் அருகே பஸ் கண்டக்டர் மீது தாக்குதல் 4 பேர் கைது
திருவாரூர் அருகே தனியார் பஸ் கண்டக்டரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
திருவாரூரில் இருந்து காரைக்கால் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை தஞ்சை மாவட்டம், பூண்டியை சேர்ந்த ஹரிகரன் (வயது 50) என்பவர் ஓட்டி சென்றார். கிடாரங்கொண்டான் என்ற இடத்தில் சென்ற போது முன்புறம் சென்ற மோட்டார் சைக்கிளை பஸ் முந்தி சென்றது. இதனால் மோட்டார் சைக்கிளை ஓட்டிய அடியக்கமங்கலத்தை சேர்ந்த முகமதுசிராஜூதீன்(32) ஆத்திரமடைந்தார்.
இதைத்தொடர்ந்து அவர் பஸ்சை விரட்டி சென்று அடியக்கமங்கலம் கடைவீதியில் வழிமறித்து நிறுத்தி டிரைவரிடம் தகராறு செய்தார். அப்போது கண்டக்டர் சிவக்குமார்(38) பஸ்சை விட்டு கீழே இறங்கி தட்டுக்கேட்டார். இந்த தகராறு முற்றியதால் முகமதுசிராஜூதீன், அவருடைய நண்பர்கள் முகமதுயாசின் (33) , சர்புதீன், முகமதுசேட்டு(40), வினோத்குமார்(28) ஆகிய 5 பேரும் சேர்ந்து கண்டக்டர் சிவக்குமாரை உருட்டுக்கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் பஸ் கண்ணாடியையும் சேதப்படுத்தினர்.
இதுகுறித்து ஹரிகரன் திருவாரூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமதுசிராஜூதீன் (32), முகமதுயாசின் (33), முகமதுசேட்டு (40), வினோத்குமார் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் சர்புதீனை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story