நெடுந்தீவு அருகே நாட்டுப்படகுகளுடன் தொண்டி மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படை நடவடிக்கை


நெடுந்தீவு அருகே நாட்டுப்படகுகளுடன் தொண்டி மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படை நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Feb 2019 4:30 AM IST (Updated: 26 Feb 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

நெடுந்தீவு அருகே நாட்டுப்படகுகளுடன் தொண்டி மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

கோட்டைபட்டினம்,

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பதும், சிறைபிடித்து செல்வதும் தொடர் கதையாகி வருகிறது. இதற்கு மீனவர்கள் நிரந்த தீர்வுகாண வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவர்கள் அந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாட்டுப்படகுகளை விரட்டியடித்துள்ளனர். இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை கைவிட்டு அங்கிருந்து கரைநோக்கி புறப்பட்டனர்.அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி நம்புதாளையை சேர்ந்த மயிலி, ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு சொந்தமான நாட்டுப்படகுகளையும், அதே ஊரை சேர்ந்த அதில் இருந்த மீனவர்கள் ரங்கதுரை மகன் வசீகரன் (வயது 18), தெய்வேந்திரன் மகன் ராமு (32), தனுஷ்கோடி மகன் அபிமன்யு (18), கணேசன் மகன் நாகராஜ் (45), செல்வேந்திரன் (42), ராம்குமார், கோவிந்தராஜ் (42), பெரியசாமி (49), காளிதாஸ் (48) ஆகிய 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்பன் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றதை கண்டித்து அப்பகுதி மீனவர்கள் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மேலும் 9 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களை மீட்க வேண்டும் என்று மீனவ அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story