மாவட்ட செய்திகள்

கண்டமங்கலம் அருகே, தீயில் கருகி பெண் பலி + "||" + Near the Kandamangalam, Woman killed in fire scorched

கண்டமங்கலம் அருகே, தீயில் கருகி பெண் பலி

கண்டமங்கலம் அருகே, தீயில் கருகி பெண் பலி
கண்டமங்கலம் அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உடல்கருகி உயிரிழந்தார்.
விழுப்புரம்,

கண்டமங்கலம் அருகே உள்ள நவமால்மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி விஜயலட்சுமி (வயது 51). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இவர் தனது மகன் ரஞ்சித் வீட்டின் பின்புற பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் இவருடைய குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் மளமளவென தீ கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.

இந்த தீ விபத்தில் விஜயலட்சுமி சிக்கிக்கொண்டார். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் அந்த தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் முடியாததால் விழுப்புரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வருவதற்குள் வீடு முழுவதுமாக தீயில் எரிந்தது. இதில் விஜயலட்சுமி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அஜித் பவாரின் பண்ணை வீட்டில் பயங்கர தீ
புனே அருகே அஜித் பவாரின் பண்ணை வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில்,அங்குள்ள கொட்டகை எரிந்து நாசமானது.
2. மூங்கில்துறைப்பட்டு அருகே, தீ விபத்தில் 4 கூரை வீடுகள் எரிந்து சாம்பல் - ரூ.7 லட்சம் சேதம்
மூங்கில்துறைப்பட்டு அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 4 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. இதில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது.
3. டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு
டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
4. கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கி பெண் பலி
கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கி பெண் பலியானார்.
5. 9 மாடி தொலை தொடர்பு நிறுவன கட்டிடத்தில் பயங்கர தீ்: மொட்டை மாடியில் தவித்த 84 ஊழியர்கள் மீட்பு
மும்பையில் தொலை தொடர்பு நிறுவனத்தின் 9 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மொட்டை மாடியில் சிக்கி தவித்த 84 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.