திடக்கழிவுகளை திறந்த வெளியில் வெளியேற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை - கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை
திடக்கழிவுகளை திறந்த வெளியில் வெளியேற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுப்பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் திடக்கழிவுகள், வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேறும் திடக்கழிவுகள் மற்றும் வீட்டு உபயோகத்தில் வெளியேறும் கழிவுகள் ஆகியவற்றை ஆங்காங்கே வெளியேற்றப்பட்டு, எரிக்கப்பட்டு வருவதாக புகார்கள் வந்துள்ளது. ஆகவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், திடக்கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் திடக்கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்தும் நிறுவனங்கள் ஆகியவை திடக் கழிவுகளை திறந்த வெளியில் வெளியேற்றுவதும் அல்லது வெளியேற்றி எரிக்கப்படுவதும் கண்டறியப்பட்டால், அந்த நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதற்கு உபயோகிக்கும் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துகொள்கிறேன். எனவே, தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். திடக்கழிவுகள் வெளியேறும் பட்சத்தில் அவற்றை முறையாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி கையாளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சுற்றுச்சூழல் மாசு இல்லா மாவட்டமாகவும், தூய்மையாகவும் அமைந்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story