மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் வெப்பநிலை அதிகமாக இருக்கும் - ஆராய்ச்சி நிலையம் தகவல்


மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் வெப்பநிலை அதிகமாக இருக்கும் - ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 27 Feb 2019 4:15 AM IST (Updated: 27 Feb 2019 2:57 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் இன்று(புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

அடுத்த 3 நாட்கள் வானம் தெளிவாக காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. காற்று மணிக்கு 6 கி.மீ.வேகத்தில் தெற்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 100.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 75 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 30 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் இருவேறு விதமான வெப்ப அளவுகள் ஒரே நாளில் நிகழக்கூடிய வாய்ப்புகள் உள்ளதால், கோழிகளில் வெப்ப அயற்சி அதிகமாக காணப்படும். இதனால் தீவன எடுப்பு குறைந்து, முட்டையின் எடையும் குறையும்.

இதை தவிர்க்க தீவனத்தில் அமினோ அமிலங்களை தாராளமாக சேர்த்து வரவேண்டும். அதிக எடையுடன் கூடிய கோழிகளில் இறப்பு காணப்பட்டால், தீவனத்தில் கோலின் குளோரைடு மருந்து சேர்த்து வரவேண்டும். கோழிகளில் தண்ணீர் எடுக்கும் அளவு கண்காணித்து, அதற்கு தகுந்தாற்போல் மேலாண்மையை மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story