புயல் நிவாரணம் வழங்குவதில் முறைகேடு: திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
புயல் நிவாரணம் வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக கூறி திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை தேவேந்திர குல மக்கள் எழுச்சி இயக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி கஜா புயலால் மிகவும் பாதிக்கப்பட்டடது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண பொருட்களையும், நிவாரண உதவிளையும் வழங்கியது. ஆனால் நிவாரணம் வழங்குவதில் பாரபட்சமாக வழங்குவதாகவும், நெடும்பலம் ஊராட்சியில் 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை எனவும், அந்த பணம் அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளதாகவும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் தமிழக தேவேந்திர குல மக்கள் எழுச்சி இயக்கத்தினர் திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாநில தலைவர் சிங்கை சரவணசோழன் தலைமை தாங்கினார்.
இளைஞரணி துணை செயலாளர் வினோத், நகர ஒருங்கிணைப்பாளர் தீபன்ராஜ், ஒன்றிய அமைப்பாளர் அம்பேத், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில பொதுச்செயலாளர் சரத்குமார், நகர செயலாளர்கள் ஜீவபாலன், மணியரசன், சட்டமன்ற பொறுப்பாளர் அருள்செல்வம், ஒருங்கிணைப்பாளர் வெற்றிபேரொளி உள்பட பலர் கலந்து கொண்டு புயல் நிவாரணம் வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story