மாவட்ட செய்திகள்

மசினகுடி அருகேவீட்டில் தீ விபத்துரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம் + "||" + Near the Masinagudi At home fire accident Rs 1 lakh was destroyed by the goods

மசினகுடி அருகேவீட்டில் தீ விபத்துரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

மசினகுடி அருகேவீட்டில் தீ விபத்துரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
மசினகுடி அருகே வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
மசினகுடி,

மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் கான்கிரீட் வீடுகள் கட்ட வசதி இல்லாத காரணத்தால், மேற்கூரையில் ஓடுகள் வேயப்பட்ட வீடுகளில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் கால்நடை வளர்ப்பு மற்றும் கூலி தொழில் செய்து பிழைப்பு நடத்துகின்றனர். இந்த நிலையில் பொக்காபுரம் பகுதியில் தக்கல் என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ரங்கன்(வயது 72). கூலி தொழிலாளி. இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக வீட்டில் இருந்த மின்சார பெட்டி வெடித்து வீடு முழுவதும் தீ பரவியது. உடனே ரங்கன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறினர்.

பின்னர் அவர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். தொடர்ந்து 1 மணி நேரம் போராடி தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த டி.வி., பீரோ, கட்டில், மெத்தை, கிரைண்டர் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து தகவல் அறிந்த மசினகுடி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் ரப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
டெல்லியில் ரப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.
2. அந்தியூர் அருகே தீ விபத்து: 3 வீடுகள் தீயில் எரிந்து நாசம்
அந்தியூர் அருகே நடந்த தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம் ஆனது.
3. போரூரில் மின்சாதன பொருட்கள் பரிசோதனை நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ரூ.2 கோடி பொருட்கள் நாசம்
போரூரில் மின்சாதன பொருட்கள் பரிசோதனை நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.2 கோடி மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.
4. திருப்பூரில், பின்னலாடை நிறுவனத்தில் தீ விபத்து - துணிகள் எரிந்து நாசம்
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் துணிகள் எரிந்து நாசமாகின.
5. மும்பையில் கடந்த 7 ஆண்டுகளில் தீ விபத்துகளில் சிக்கி 300 பேர் பலி தீயணைப்பு துறை தகவல்
மும்பையில் கடந்த 7 ஆண்டுகளில் நடந்த தீ விபத்துகளில், 300 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்து உள்ளது.