அ.தி.மு.க. ஆட்சியை விரட்ட மக்கள் தயாராக உள்ளனர் - கனிமொழி எம்.பி. பேச்சு


அ.தி.மு.க. ஆட்சியை விரட்ட மக்கள் தயாராக உள்ளனர் - கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 4 March 2019 4:30 AM IST (Updated: 4 March 2019 4:22 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஆட்சியை விரட்ட மக்கள் தயாராக உள்ளனர் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்கள் மீது நம்பிக்கை வைத்து உள்ளார். நாடாளுமன்ற தேர்தல், 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது தொண்டர்கள் கையில் தான் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியை விரட்ட மக்கள் தயாராக உள்ளனர். அ.தி.மு.க. மீதும் பா.ஜனதா மீதும் மக்களுக்கு வெறுப்பு அதிகமாக உள்ளது.

அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதாவினர் வெற்றிக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். மக்களுக்கு வாக்களிப்பது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏன் என்றால் அவர்கள் வாக்கு எந்திரத்திலும் மோசடி செய்ய வாய்ப்பு உள்ளது. மக்களை நீங்கள் சந்தித்து இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தூத்துக்குடியில் மக்கள் 100 நாட்கள் போராடினார்கள். ஆனால் கடைசியில் மக்கள் மீது வன்முறையை தூண்டிவிட்டு சுட்டுக் கொலை செய்தனர். பதவிக்காக எதையும் செய்வார்கள். எனவே அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதாவை தமிழகத்திலும், இந்தியாவிலும் இருந்தும் விரட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story