வட்டாட்சியர்களை பணிமாறுதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்


வட்டாட்சியர்களை பணிமாறுதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 March 2019 4:00 AM IST (Updated: 5 March 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்ட வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்,

கரூர் மாவட்ட வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு வருவாய்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகளை மாவட்டம் விட்டு மாவட்டம் பணிமாறுதல் செய்து நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில துணை தலைவர் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story