விருதுநகர் வணிக வரித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.33 ஆயிரம் சிக்கியது


விருதுநகர் வணிக வரித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.33 ஆயிரம் சிக்கியது
x
தினத்தந்தி 5 March 2019 4:24 AM IST (Updated: 5 March 2019 4:24 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் வணிகவரித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தி ரூ.32.ஆயிரத்து 900 ஐயும் ஆவணங்களையும் கைப்பற்றினர்.

விருதுநகர்,

விருதுநகரிலுள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் ஜி.எஸ்.டி.யில் பிடித்தம் செய்த பணத்தை வணிகர்களுக்கு ஆன் – லைனில் திரும்ப செலுத்துவதற்கு லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது.

இதனைதொடர்ந்து நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு துறை துணை ஆய்வு அதிகாரியான சிறப்பு தாசில்தார் மகேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான போலீசார் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கணக்கில் வராத ரூ.32 ஆயிரத்து 900 –ஐ கைப்பற்றினர். இதனைதொடர்ந்து ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வணிக வரித்துறை உதவி ஆணையர் பூங்கோதையிடம் துருவி துருவி விசாரணை செய்யப்பட்டது. இந்த விசாரணை இரவு 8 மணி வரை நீடித்தது.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story