கோரிக்கை அட்டைகளை கழுத்தில் அணிந்து ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை
கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை கழுத்தில் அணிந்து கொண்டு ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
ஸ்ரீரங்கம்,
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் கோட்டத்தில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களை திட்டிய சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்தும், பணிபுரியும் பெண்களை தரக்குறைவாகப் பேசிவரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் துப்புரவு தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் இளையராஜா தலைமையில் துப்புரவு தொழிலாளர்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை கழுத்தில் அணிந்து கொண்டு ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மாநகராட்சி உதவி ஆணையர் குணசேகரன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில், துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாறன், மாவட்ட பொருளாளர் நாகராஜ், துணை தலைவர் கிச்சான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் வேளாங்கண்ணி, ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது, உரிய விசாரணை நடத்தி 10 நாட்களுக்குள் சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் கோட்ட அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story