5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 1,356 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து கலெக்டர் தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 1,356 மையங் களில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளி கூடங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்ற 1,356 மையங்களில் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே சொட்டு மருந்து வழங்கப்பட்டு இருந்தாலும் மீண்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
இந்த முகாமில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 243 எண்ணிக்கையிலான 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்த முகாமிற்கு தேவையான போலியோ சொட்டு மருந்து 73 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 2 நகராட்சிகளுக்கும் பிரித்து வழங்கப்பட்டு உள்ளது. இந்த முகாமினை சிறப்புற நடத்திட சுகாதாரம், மருத்துவம், வருவாய், சத்துணவு, கல்வி, மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா துறைகளை சேர்ந்த 5 ஆயிரத்து 634-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து சொட்டு மருந்து மையங்களுக்கு போலியோ சொட்டு மருந்துகளை குறிப்பிட்ட குளிர்பதன நிலையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு சொட்டு மருந்து மையத்திலும் இந்த பணியில் ஈடுபட இருக்கும் 4 பணியாளர்களும் மையத்திற்கு வரும் அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்குவார்கள். அடுத்தடுத்த நாட்களில் இவர்கள் இரு குழுக்களாக பிரிந்து வீடு வீடாக சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவார்கள். போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டு இருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். வயல்களில் குடியிருப்போர், சாலையோர குடியிருப்புகள், செங்கல் காலவாய் குடியிருப்புகள், கல் குவாரிகள், பஸ் நிலையங்கள், திருவிழா கூட்டங்கள், ரெயில் நிலையங்கள், சுங்கச்சாவடிகள் போன்ற பகுதிகளில் இருக்கும் குழந்தைகளுக்கு விடுபடாமல் சொட்டு மருந்து வழங்க நடமாடும் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story