கடன்களை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கடன்களை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 March 2019 4:30 AM IST (Updated: 12 March 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

கடன்களை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாநில பொதுச்செயலாளர் துரைமாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வீர.மோகன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மீத்தேன், ஷேல் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்தக் கூடாது. தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங் களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும். கஜா புயல் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு முழு இழப் பீட்டு தொகை வழங்க வேண்டும்.

2017-18-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு தாமதம் இன்றி வழங்க வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முழுமையாக விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

விவசாயிகளின் குத்தகை பாக்கிகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். திருமண்டங்குடி சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும். கரும்பு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story