பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் 50 பேர் கைது
முத்துப்பேட்டை அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 50 பேரை, போலீசார் கைது செய்தனர்.
முத்துப்பேட்டை,
முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் பகுதி விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து பல முறை அரசு அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனை கண்டித்து முத்துப்பேட்டையை அடுத்த கோவிலூர் ஆர்ச் அருகில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி தலைவர் ரவி, அ.ம.மு.க. மாவட்ட இணைச்செயலாளர் ஜெகன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயிர்க்காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story