தேர்தல் தொடர்பான தகவல்கள்-புகார்களின் நிகழ்வுகளை கண்காணிக்க குழுக்கள் அமைப்பு கலெக்டர் தகவல்
தேர்தல் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களின் நிகழ்வுகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் உமா மகேஸ்வரி கூறினார்.
புதுக்கோட்டை,
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது என இந்திய தேர்தல் ஆணையத்தால் கடந்த 10-ந் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நடவடிக்கைகளின்போது எந்த ஒரு நபரும் ரொக்கமாகவோ அல்லது பொருளாகவோ, லஞ்சமாக கொடுப்பதோ அல்லது பெறுவதோ இந்திய தண்டனை சட்டப்படி ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது 2-ம் சேர்த்து வழங்கக்கூடிய அளவிற்குரிய குற்றமாகும்.
எந்தவொரு நபரும் எந்தவொரு வேட்பாளரையோ அல்லது வாக்காளரையோ மிரட்டுவதோ அல்லது காயப்படுத்தும் விதத்தில் நடந்துகொள்வது இந்திய தண்டனைசட்டப்படி ஒரு ஆண்டு சிறைதண்டனை அல்லது அப ராதம் அல்லது 2-ம் சேர்த்து வழங்கக்கூடிய அளவிற்குரிய குற்றமாகும்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தலின்போது, அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் செலவினம் குறித்து வரும் தகவல்கள் மற்றும் புகார்களை பெற்று புகாரில் குறிப்பிடும் இடத்திற்கு சென்று நிகழ்வுகளை வீடியோகிராப் செய்ய சட்டமன்ற தொகுதிக்கு நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினரால் எடுக்கப்படும் வீடியோ பதிவுகள் அடங்கிய குறுந்தகட்டினை, வீடியோ பதிவிற்குரிய சட்டமன்ற தொகுதியின் பெயர், நாள் மற்றும் நேரத்தை குறிப்பிட்டு பொதுமக்கள் குறுந்தகடு ஒன்றிற்கு ரூ.300-ஐ தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் செலுத்தி பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story