மாவட்ட செய்திகள்

வில்லியனூர் அருகே, வீடு புகுந்து தொழிலாளி மீது தாக்குதல் + "||" + Near Villianur, Home inroads Attack on the worker

வில்லியனூர் அருகே, வீடு புகுந்து தொழிலாளி மீது தாக்குதல்

வில்லியனூர் அருகே, வீடு புகுந்து தொழிலாளி மீது தாக்குதல்
வில்லியனூர் அருகே தொழிலாளி வீடு புகுந்து தாக்கப்பட்டார். அது தொடர்பாக ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி,

வில்லியனூர் அருகே திருக்காஞ்சி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (வயது 32), பிளம்பர் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வில்லியனூரில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். உறுவையாறு காலனி பகுதியில் சென்றபோது, அதே பகுதியைச்சேர்ந்த ஒருவர் ஆட்டோவுக்கு வழிவிடாமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதனை நரேஷ்குமார் கண்டித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் உறுவையாறு காலனியை சேர்ந்த குருபாலன் (32), தட்சிணாமூர்த்தி (25), அருள்ராஜ் (20) ஆகியோர் நரேஷ்குமாரை தேடி திருக்காஞ்சியில் உள்ள அவருடைய வீட்டுக்குள் சென்று எங்கள் நண்பரை எப்படி கண்டிக்கலாம் என்று கேட்டு தகராறு செய்தனர். தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து நரேஷ்குமாரை சரமாரியாக தாக்கியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துவிட்டு தப்பி சென்றனர்.

இதில் காயம் அடைந்த அவர் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் தாக்குதல் குறித்து மங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து குருபாலனை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கோட்டக்குப்பத்தில் கடன் தர மறுத்தவர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு - வாலிபர் கைது
கோட்டக்குப்பத்தில் கடன் தர மறுத்தவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2. புதுவை என்ஜினீயரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
புதுவை என்ஜினீயரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3. திருக்கடையூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை
திருக்கடையூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியை கடத்தி சென்று கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. தென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலி: காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்
தென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலியாயினர். இதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.