பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்தை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்தை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 March 2019 4:30 AM IST (Updated: 14 March 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் நடந்த பலாத்கார சம்பவத்தை கண்டித்து தஞ்சையில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்,

பொள்ளாச்சியில் இளம்பெண்கள், மாணவிகள் பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய கோரியும், மகளிர் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட தலைவர் கலைச்செல்வி, ஒன்றிய செயலாளர் மாலதி, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், துணைச் செயலாளர் அன்பு, விவசாய சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், பாலியல் பலாத்கார சம்பவத்தில் 16 பேர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் 4 பேரை மட்டும் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் தஞ்சையில் உள்ள அ.தி.மு.க. பிரமுகர் வீடுகளில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

Next Story