மாவட்ட செய்திகள்

பெண் உள்பட 2 பேரிடம் ரூ.3 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை + "||" + The Election Commission of India has detained Rs

பெண் உள்பட 2 பேரிடம் ரூ.3 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

பெண் உள்பட 2 பேரிடம் ரூ.3 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பெண் உள்பட 2 பேரிடம் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர்,

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனை தொடர்ந்து வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடியில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படையினரான ஆலத்தூர் துணை தாசில்தார் பழனிசெல்வன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருச்சியில் இருந்து கர்நாடகா நோக்கி சென்ற ஒரு காரை மறித்து, அதில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கர்நாடகம் மாநிலம், கோலார் மாவட்டம், மாலூர் தாலுகா, ஜெயமங்கலாவை சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 38) என்பது தெரியவந்தது. அவர் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்து 900 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, அந்த பணத்தை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி மஞ்சுளாவிடம் ஒப்படைத் தனர். இதேபோல் நேற்று காலையில் பெரம்பலூர்- துறையூர் நெடுஞ்சாலையில் களரம்பட்டி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினரான பெரம்பலூர் துணை தாசில்தார் மாயகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த பெரம்பலூர் கல்யாண் நகரை சேர்ந்த பூபதி மனைவி ஆனந்தி (47) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 500-ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதனிடம் ஒப்படைத்தனர்.

மஞ்சுநாதன், ஆனந்தி ஆகியோரிடம் தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக 2 பேரிடம் மொத்தம் ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்து 400 தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. கோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
கோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
2. ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனை சாவடி மீது பயங்கரவாத தாக்குதல் : 11 பேர் உடல் சிதறி பலி
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தற்போது ஐ.எஸ். பயங்கரவாதிகளும் அங்கு காலூன்றி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
3. திருக்காட்டுப்பள்ளியில் 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த 10 கிலோ புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
4. கோவையில் தொடரும் பரபரப்பு, ஐ.எஸ். ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை - செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல்
கோவையில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் என்று சந்தேகப்படும் 3 பேரின் வீடுகளில் மாநகர போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள். இதில் செல்போன்கள், சிம்கார்டுகள் உள்பட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
5. கோவையில் 2வது நாளாக 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
கோவையில் 2வது நாளாக 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.