மாவட்ட செய்திகள்

வெள்ளாற்றின் நடுவே ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு + "||" + Public resistance to the construction of bore wells in the middle of the river

வெள்ளாற்றின் நடுவே ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

வெள்ளாற்றின் நடுவே ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி சார்பில் வெள்ளாற்றின் நடுவே ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியது.
மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி சார்பில் வெள்ளாற்றின் நடுவே ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியது. இந்த கிணறு கடலூர் மாவட்ட எல்லையில் அமைக்கப்பட உள்ளதாக கூறி, அரங்கூர் பொதுமக்கள் நேற்று காலை ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்தி, அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த ராமநத்தம் போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் பொதுமக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாகவும், ஏற்கனவே அதே பகுதியில் இரண்டு ஆழ்துளை கிணறு உள்ளதாகவும், மீண்டும் 3-வது முறையாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கொருக்குப்பேட்டையில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல்
கொருக்குப்பேட்டையில் சாலையை சீரமைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர்.
2. அந்தியூர் அருகே, பொதுமக்கள் சாலை மறியல்
அந்தியூர் அருகே தார்சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை பெண்கள் தடுத்து நிறுத்தினர் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
அசேஷம் கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை பெண்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
4. கரூர் காமராஜர் மார்க்கெட் பகுதியில் ரெட்டை வாய்க்கால் பாலப்பணி முடிவடைவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கரூர் காமராஜர் மார்க்கெட் பகுதியில் ரெட்டை வாய்க்கால் பாலப்பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு: தமிழக அரசின் மனு மீதான விசாரணை ஜனவரி 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழக அரசின் மனு மீதான விசாரணையை ஜனவரி 23-ந் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.