மாவட்ட செய்திகள்

10 மாத குழந்தையை கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு + "||" + The father of the 10-month-old child has been sentenced to life imprisonment by Namakal Women's Court

10 மாத குழந்தையை கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

10 மாத குழந்தையை கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
பரமத்திவேலூர் அருகே 10 மாத குழந்தையை கொலை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள ஜமீன் இளம்பள்ளியை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(வயது 34), விவசாயி. இவரது மனைவி ரேவதி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதற்கிடையே ரேவதியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரின் சகோதரர் நல்லசாமி ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார்.


இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ரேவதியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வனை கைது செய்தனர். பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த தமிழ்செல்வன், அவருடைய 10 மாத கைக்குழந்தை தரனேஷை கொலை செய்து விவசாய தோட்டத்தில் புதைத்து உள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஜேடர்பாளையம் போலீசார் இது தொடர்பாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த இரு வழக்குகள் விசாரணையும் நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சுசீலா வாதாடினார். இந்த வழக்குகளில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அப்போது 10 மாத குழந்தையை கொலை செய்ததற்கு தமிழ்செல்வனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இளங்கோ உத்தரவிட்டார். அதேபோல் ரேவதியை தற்கொலைக்கு தூண்டியதற்காக தமிழ்செல்வனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழ்செல்வனை போலீசார் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயி சரமாரி வெட்டிக் கொலை; 5 பேர் படுகாயம் பிரபல ரவுடி உள்பட 3 பேர் கைது
சாமல்பட்டியில் திருவிழாவில் நடந்த மோதலில் விவசாயி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக பிரபல ரவுடி ஜிம் மோகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. சிறுவன் கடத்தி கொலை: உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் திடீர் போராட்டம்
கன்னியாகுமரி அருகே சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட உறவினர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
3. கார் டிரைவர் கொலை வழக்கில் சிக்கிய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருச்செங்கோடு அருகே கார் டிரைவர் கொலை வழக்கில் சிக்கிய 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவிட்டு உள்ளார்.
4. மனைவியை எரித்து கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை - வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
நாட்டறம்பள்ளி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் மீது மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து எரித்து கொன்ற டிரைவருக்கு வேலூர் மகளிர் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
5. தன்னை திட்டிய பெண்ணின் குழந்தையை கடத்திய 13 வயது சிறுவன் கைது - தாதரில் பரபரப்பு
தாதரில் தன்னை திட்டிய பெண்ணின் குழந்தையை கடத்திய 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.