பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 17 பேர் கைது


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 17 பேர் கைது
x
தினத்தந்தி 15 March 2019 4:15 AM IST (Updated: 15 March 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று மதியம் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர்,

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில், அக்கட்சியினர் நேற்று மதியம் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து, அவர்களை உயர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 17 பேரை கைது செய்து, வேனில் ஏற்றி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காலை 10 மணிக்கு சாலை மறியல் செய்யப்போவதாக கூறியதால், காலை 10 மணிக்கு முன்பாகவே போலீசார் பாதுகாப்பு பணிக்கு வந்து விட்டனர். ஆனால் சாலை மறியல் மதியம் 12 மணிக்கு மேல் தான், அதுவும் சிறிது நேரம் தான் நடைபெற்றதால் போலீசார் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

Next Story