சத்திரப்பட்டி அருகே, கயிறு தொழிற்சாலையில் தீ


சத்திரப்பட்டி அருகே, கயிறு தொழிற்சாலையில் தீ
x
தினத்தந்தி 15 March 2019 3:45 AM IST (Updated: 15 March 2019 3:09 AM IST)
t-max-icont-min-icon

சத்திரப்பட்டி அருகே கயிறு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது.

சத்திரப்பட்டி, 

சத்திரப்பட்டி அருகே வேலூர்-அன்னப்பட்டியை அடுத்து அனுப்பப்பட்டி பிரிவு பகுதி உள்ளது. அந்த பகுதியில் பெருமாள்சாமி என்பவருக்கு சொந்தமான கயிறு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பெண்கள் உள்பட ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு கயிறு நார் வைத்திருந்த பகுதியில் இருந்து புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட தொழிலாளர்கள் சிலர் அங்கு சென்று பார்த்தபோது, கயிறு நாரில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அது முடியவில்லை. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், மற்ற பகுதிக்கும் தீ பரவ தொடங்கியது. இதையடுத்து அவர்கள் தொழிற்சாலை நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் தனசேகரபாண்டியன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

எனினும் அந்த பகுதியில் இருந்த கயிறு நார், மின்சாதனங்கள், ஆலை கருவிகள் என பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட் கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில், அங்குள்ள வயரில் மின்கசிவு ஏற்பட்டதாலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்றனர். இதற்கிடையே தகவலறிந்த சத்திரப்பட்டி போலீசாரும் அங்கு வந்தனர். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story