கரூர் இ-சேவை மையத்தில் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வாங்க குவிந்த பொதுமக்கள்
கரூரில் உள்ள இ-சேவை மையத்தில் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
கரூர்,
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்பு மனுதாக்கல் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அதிகாரி மூலம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தேர்தலையொட்டி நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்ள 20,258 விண்ணப்பங்கள் அதிகாரிகளால் ஏற்கப்பட்டன. இத்தகைய விண்ணப்பங்களை கொடுத்தவர்களுக்கு வருகிற 22-ந் தேதிக்குள் புதிதாக வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் அரசு இ-சேவை மையத்தினை அணுகி ரூ.25 செலுத்தி வண்ண வாக்காளர் அடையாள அட்டையினை பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
வண்ண வாக்காளர் அட்டை பெற ஆர்வம்
அதன்படி நேற்று கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் புதிதாக வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற ஏராளமான பொது மக்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர். அதில் முதல் தடவை வாக்களிக்க போகும் ஆர்வத்தில் வண்ண வாக்காளர் அடையாள அட்டையை பெற்றவர்கள் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப் படுத்தியதையும் காண முடிந்தது.

Related Tags :
Next Story