40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் திருச்சியில் தம்பிதுரை பேட்டி
40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும் என்று திருச்சியில் தம்பிதுரை கூறினார்.
செம்பட்டு,
தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் தொடர்ந்து அ.தி.மு.க. பாடுபட்டு வருகிறது. இதில் எந்த மாற்றமும் கிடையாது. எந்த சூழ்நிலையிலும் எங்களது கொள்கையில் இருந்து விலகமாட்டோம். தொகுதி மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளேன். குறிப்பாக கரூர் தொகுதியில் ஜவுளி தொழில் குறித்து பேசி உள்ளேன்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எங்களது சக நண்பர்களோடு இணைந்து 23 நாட்கள் நாடாளுமன்ற அவையை முடக்கி வெற்றி பெற்றுள்ளோம். ஜெயலலிதா என்ன நினைத்தாரோ?. அந்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்தது. அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதனை எதிர்த்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் போராடினோம்.
இதையடுத்து மத்திய அரசும் உச்சநீதிமன்றத்தில் அணைகட்ட அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும். அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. இது மக்கள் விரும்புகிற கூட்டணி. மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி நடைபெற வேண்டும். இது அதற்காக நடைபெறுகிற தேர்தல் ஆகும்.
எம்.ஜி.ஆர். தொடங்கிய இந்த இயக்கத்தை தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பாக வழிநடத்தி செல்கிறார்கள். அவர்கள் மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள். ஆகவே மக்கள் ஆதரவு எங்களுக்கு உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story