மன்னார்குடியில் பரபரப்பு: சாலையில் பிணமாக கிடந்த முதியவர் போலீசார் விசாரணை


மன்னார்குடியில் பரபரப்பு: சாலையில் பிணமாக கிடந்த முதியவர் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 19 March 2019 3:45 AM IST (Updated: 19 March 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் சாலையில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று பிணமாக கிடந்தார். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர் கள் மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்த னர்.

தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணை

விசாரணையில் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றிய விவரங்கள் தெரியவரவில்லை. மேலும் எப்படி இறந்தார்? என்பது பற்றியும் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதியவர் ஒருவர் சாலையில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story