தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம் சீமான் பேட்டி


தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம் சீமான் பேட்டி
x
தினத்தந்தி 19 March 2019 5:30 AM IST (Updated: 19 March 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

ஆலந்தூர்,

சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:–

கூட்டணி வைத்தாலும் தனியாக நின்றாலும் திட்டுவது என்று கொள்கை வைத்து உள்ளார்கள். அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்து வென்று சாதித்தது என்ன? மாற்றம் என்று கூறி யாருடனாவது சேர்ந்து ஏமாற்றத்தை தருவது. தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். வருங்கால சமுதாயத்துக்கு நம்பிக்கையாக நான் இருந்துவிட்டுப்போகிறேன்.

நாட்டின் பாதுகாவலர்கள் என்று பா.ஜ.க. தலைவர்கள் போட்டுக்கொள்கிறார்கள். நாட்டை அவர்களிடம் இருந்து நாம் பாதுகாக்க வேண்டியநிலை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story