நாடாளுமன்ற தேர்தலில் 360 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும் எச்.ராஜா பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் 360 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று, எச்.ராஜா கூறினார்.
கபிஸ்தலம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலுக்கு பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா குடும்பத்துடன் வந்தார். கோவிலில் நடைபெற்ற சத்ருசம்கார யாகத்தில் கலந்து கொண்ட அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மத்திய பா.ஜனதா அரசு வலிமையுடன் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா 360 தொகுதிகளை கைப்பற்றும். தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் 35 தொகுதிகளை கைப்பற்றும். தற்போது தமிழகத்தில் நாங்கள் அமைத்துள்ள கூட்டணி தேசபக்தி, சக்தி, மக்கள்நலனில் அக்கறை போன்றவற்றை அடிப்படையாக கொண்டது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அரசின் சாதனைகளை கூறி வாக்குசேகரிப்போம். இந்தியாவில் உள்ள தேசவிரோதிகள் ராணுவத்தை நம்பாமல் பேசிவருகின்றனர். சரக்கு மற்றும் சேவை வரியால் வியாபாரிகள் சந்தோஷமாக உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் தமிழகத்தை முன்னேற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story