மாவட்ட செய்திகள்

செங்குன்றத்தில் ரூ.25 லட்சம் டீத்தூள் கடத்தி விற்பனை; 3 பேர் கைது + "||" + Tea powder conductor sales; 3 people arrested

செங்குன்றத்தில் ரூ.25 லட்சம் டீத்தூள் கடத்தி விற்பனை; 3 பேர் கைது

செங்குன்றத்தில் ரூ.25 லட்சம் டீத்தூள் கடத்தி விற்பனை; 3 பேர் கைது
அசாம் மாநிலத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள டீத்தூளை கடத்தி விற்றதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். லாரியின் உரிமையாளரை தேடி வருகிறார்கள்.

செங்குன்றம்,

கோவை ராகவேந்திரன் காலனியை சேர்ந்தவர் ராம்வீர்சிங் (வயது 37). தொழில் அதிபரான இவர், தனக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்புள்ள டீத்தூளை அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து பொள்ளாச்சிக்கு கொண்டு வர முடிவு செய்திருந்தார்.

இதற்காக திருவண்ணாமலை குறிஞ்சிக்குப்பத்தை சேர்ந்த காண்டீபன் என்பவருக்கு சொந்தமான லாரியில் டீத்தூள் பெட்டிகள் ஏற்றப்பட்டது. அந்த லாரியை திருவண்ணாமலையை சேர்ந்த லாலாபாஷா என்பவர் கவுகாத்தியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி ஓட்டி வந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் 4–ந் தேதி புறப்பட்ட லாரி, ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே வந்தபோது லாரியின் உரிமையாளர் காண்டீபன் டிரைவர் லாலாபாஷாவுக்கு போன் செய்துள்ளார். அப்போது, லாரியை பொள்ளாச்சிக்கு கொண்டு செல்லாமல் சென்னை செங்குன்றம் கொண்டு வருமாறு கூறியுள்ளார்.

தனது முதலாளியின் பேச்சை கேட்டு, டிரைவர் லாரியை செங்குன்றம் கொண்டு வந்தார். பின்னர் லாரியை லாலாபாஷாவிடமிருந்து காண்டீபன் வாங்கி ஓட்டி சென்று விட்டார். இதற்கிடையே பல நாட்களாகியும் டீத்தூள் வராததால் சந்தேகம் அடைந்த தொழில் அதிபர் ராம்வீர்சிங், டிரைவர் லாலாபாஷாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தார். அப்போது லாலாபாஷா தனது முதலாளி லாரியை ஓட்டி சென்று விட்டதாக தெரிவித்தார். எனவே டீத்தூள் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த ராம்வீர்சிங், இதுகுறித்து செங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து மாதவரம் துணை கமி‌ஷனர் ரவளிபிரியா உத்தரவின்பேரில் புழல் உதவி கமி‌ஷனர் ரவி மேற்பார்வையில், செங்குன்றம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழழகன் மற்றும் போலீசார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் நடத்திய விசாரணையில் டீத்தூளை, சென்னை கொடுங்கையூர் டி.வி.கே.லிங்க் சாலையை சேர்ந்த ராஜா (33) என்பவரிடம் ரூ.17 லட்சத்திற்கு விற்று விட்டு காண்டீபன் தப்பியது தெரியவந்தது.

இதையடுத்து கடத்தல் டீத்தூளை வாங்கிய ராஜா மற்றும் காண்டீபனின் கூட்டாளி விஜய்(41), சகோதரர் பழனி (35) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் தலைமறைவான காண்டீபன், டீத்தூள் விற்க உதவிய தேவராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வேலை, கடன் வாங்கித்தருவதாக மோசடி: தனியார் அறக்கட்டளை நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
வேலூரில் தனியார் மருத்துவமனையில் வேலைவாங்கித் தருவதாகவும், கடன் பெற்றுத்தருவதாகவும் கூறி மோசடி செய்த தனியார் அறக்கட்டளை நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
2. மோகனூரில் வாக்கு சேகரிப்பின் போது இருதரப்பினர் மோதல்; 2 பேர் கைது 31 பேர் மீது வழக்கு
மோகனூரில் வாக்கு சேகரிப்பின் போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
3. தானேயில் 1½ வயது பெண் குழந்தையை கடத்திய சிறுமி உள்பட 2 பேர் கைது
தானேயில் கடத்தப்பட்ட 1½ வயது பெண் குழந்தையை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக சிறுமி உள்பட 2 பேர் போலீசாரிடம் சிக்கினர்.
4. சில்லரை தகராறில் பஸ் மீது கல்வீசிய வாலிபர் கைது
சில்லரை தகராறில் பஸ் மீது கல்வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் பயணி ஒருவர் காயம் அடைந்தார்.
5. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போலீஸ் அதிகாரி மகன் குத்திக்கொலை எலக்ட்ரீசியன் கைது
சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மகனை குத்தி கொலை செய்த எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.