கார் டிரைவர் கொலை வழக்கில் சிக்கிய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருச்செங்கோடு அருகே கார் டிரைவர் கொலை வழக்கில் சிக்கிய 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவிட்டு உள்ளார்.
திருச்செங்கோடு,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள எட்டிமடைபுதூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (வயது 40). கார் டிரைவர்.
இவர் கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி திருச்செங்கோட்டில் உள்ள சேலம் சாலையில் காரில் சென்றபோது, மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரத் (வயது 33), ஒற்றைகண் செல்வம் என்கிற செல்வம் (29), கண்ணாத்தாள் என்கிற கண்ணன் (31), டோக்கரா கண்ணன் (30) என்கிற கண்ணன் உள்பட 12 பேரை கைது செய்து, சேலம் சிறையில் அடைத்து உள்ளனர்.
இந்நிலையில் பாரத், ஒற்றைகண் செல்வம், கண்ணாத்தாள் என்கிற கண்ணன், டோக்கரா கண்ணன் ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று கலெக்டர் ஆசியா மரியம், 4 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story