வேலூரில் வெவ்வேறு இடங்களில் கார்களில் கொண்டு சென்ற ரூ.4 லட்சம் பறிமுதல் - பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை
வேலூரில் வெவ்வேறு இடங்களில் கார்களில் கொண்டு சென்ற ரூ.4 லட்சம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவில் உள்ளவர்கள் மாவட்ட எல்லை மற்றும் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் பறக்கும் படை தாசில்தார் ரூபிபாய் தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காட்பாடியில் இருந்து வந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.
அதில் ரூ.1 லட்சம் இருந்தது. பணம் கொண்டு வந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் அவர் காட்பாடியை சேர்ந்த மணிவண்ணன் (வயது 45) என்பதும், அவர் தொழில் நிமித்தமாக சென்னைக்கு பணம் கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பணத்தை அவர்கள் பறிமுதல் செய்து வேலூர் தாசில்தார் ரமேஷிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல 12 மணி அளவில் அங்கு வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் சென்னை காவேரிநகரை சேர்ந்த பிரவீன்குமார் (26) என்பவரிடம் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் இருந்தது. அவர் வேலூருக்கு தொழில்நிமித்தமாக பணம் கொண்டு வந்ததாக தெரிவித்தார். உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அங்கு வந்த மற்றொரு காரை மடக்கினர். அதில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சேவூரை சேர்ந்த சகுந்தலா என்பவரிடம் இருந்து ரூ.52 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மற்றொரு காரை சோதனை செய்தபோது சத்துவாச்சாரியை சேர்ந்த சொக்கநாதன் என்பவர் கொண்டு வந்த ரூ.70 ஆயிரத்து 270 பறிமுதல் செய்யப்பட்டது. சகுந்தலாவும், சொக்கநாதனும் நகை வாங்க பணம் கொண்டு வந்ததாகவும் அவர்களிடம் அதற்கான ஆவணங்கள் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் வேலூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோன்று விற்பனை வரி அலுவலர் நட்ராஜன் தலைமையிலான பறக்கும்படையினர் வேலூரை அடுத்த ஜமால்புரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காரை மடக்கி நடத்திய சோதனையில் அதில் ரூ.67 ஆயிரத்து 500 இருந்தது. பணம் கொண்டு வந்தநபர் சத்துவாச்சாரியை சேர்ந்த கமல் என்பதும் அவர் கட்டிட ஒப்பந்ததாரர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அவர் வைத்திருந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்து அணைக்கட்டு தாசில்தார் ஹெலனிடம் ஒப்படைத்தனர். நேற்று ஒரே நாளில் ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 770 பறிமுதல் செய்யப்பட்டது.

Related Tags :
Next Story