பாதுகாப்பு கேட்டு எம்.பி.பி.எஸ். மாணவி காதல் கணவருடன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம்


பாதுகாப்பு கேட்டு எம்.பி.பி.எஸ். மாணவி காதல் கணவருடன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம்
x
தினத்தந்தி 22 March 2019 4:00 AM IST (Updated: 22 March 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு கேட்டு எம்.பி.பி.எஸ். மாணவி காதல் கணவருடன் வந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார்.

கரூர்,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் பள்ளபட்டியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 28). கார் டிரைவர். இவரது காதல் மனைவி தரணி (21). இவர் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். நேற்று ஆனந்த்-தரணி இருவரும் பாதுகாப்பு கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து தஞ்சம் அடைந்தனர்.

பின்னர் அங்கு தரணி சார்பில் போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரனிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், நானும், ஆனந்தும் காதலித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பதிவு திருமணம் செய்தோம். எனது தந்தை வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் சாதியை காரணம் காட்டி ஆனந்தையும், என்னையும் பிரிக்க எனது பெற்றோர் முயற்சி எடுத்து வருகிறார்கள். தற்போது நான் கருவுற்று இருக்கிறேன்.

இந்தநிலையில் எனது பெற்றோர், உறவினர்களால் எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எனக்கும், எனது கணவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை பெற்று கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார். 

Next Story