ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பஸ்சில் கடத்திய ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் ஒருவர் கைது


ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பஸ்சில் கடத்திய ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் ஒருவர் கைது
x
தினத்தந்தி 22 March 2019 11:00 PM GMT (Updated: 22 March 2019 6:54 PM GMT)

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பஸ்சில் கடத்திவரப்பட்ட ஹவாலா பணம் ரூ.40 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.

செங்குன்றம்,

ஆந்திர மாநிலம் குண்டூர் அப்பாபுரம் பகுதியில் இருந்து பஸ் ஒன்றில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து வந்த பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒரு துணிப்பையில் கட்டுக்கட்டாக ரூ.40 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அது ஹவாலா பணம் என்பதும், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்படுவதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர் இது சம்பந்தமாக ஆந்திர மாநிலம் குண்டூர் அப்பாபுரம் கிராமத்தை சேர்ந்த ஷேக்சலாம்(வயது 56) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story