கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமி வேட்பு மனுதாக்கல்
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அ.தி.மு.க. சார்பில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி அறிவிக்கப்பட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அ.தி.மு.க. சார்பில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பிரபாகரிடம், வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அப்போது அவருடன் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார், பா.ஜனதா மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், பா.ம.க. மாநில துணை செயலாளர் சுப.குமார், தே.மு.தி.க. மேற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர். மாற்று வேட்பாளராக தற்போதைய எம்.பி.யான அசோக்குமார் மனு தாக்கல் செய்தார்.
பின்னர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறும் போது:-
காங்கிரஸ் கட்சி கிருஷ்ணகிரியில் பலமுறை வெற்றி பெற்றுள்ளது. ஆனால் மக்களின் கோரிக்கைகள் எதையும் அந்த கட்சி நிறைவேற்றவில்லை. தற்போது ஜெயலலிதா ஆசியுடன் ஆட்சி நடந்து வருகிறது. இப்போது உள்ள பிரச்சினைகள் அனைத்தும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கூறி சுமூகமாக தீர்த்து வைக்கப்படும் என்று கூறினார். இதேபோல் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதுசூதனன், சுயேட்சை வேட்பாளராக தேவரப்பா ஆகியோர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பிரபாகரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Related Tags :
Next Story