மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி களம் இறங்குகிறார்கள் நாடாளுமன்ற தொகுதியில் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி + "||" + 111 TN farmers contest against Modi in Parliamentary constituency

கோரிக்கைகளை வலியுறுத்தி களம் இறங்குகிறார்கள் நாடாளுமன்ற தொகுதியில் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி

கோரிக்கைகளை வலியுறுத்தி களம் இறங்குகிறார்கள் நாடாளுமன்ற தொகுதியில் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி
வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து, தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிடுகிறார்கள். அவர்கள் ஏப்ரல் 24-ந் தேதி தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.
திருச்சி,

நாடாளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி, மே மாதம் 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் 7-வது இறுதி கட்டமாக மே 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


மோடிக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதனால் இந்த தொகுதியில் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லி சென்று பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் அதற்கு போதிய பலன் கிடைக்கவில்லை.

இதனால் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிட முடிவு செய்து உள்ளனர்.

இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாய விளைபொருட் களுக்கு லாபகரமான விலை கிடைக்கவேண்டும், விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், 60 வயது பூர்த்தியான விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும், தனிநபர் காப்பீடு வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் எனது தலைமையில் 141 நாட்கள் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

தற்போது, அதே கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில், நான் உள்பட தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிட இருக்கிறோம்.

இதற்காக நாங்கள் வாரணாசிக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 22-ந் தேதி ரெயிலில் புறப்பட்டு செல்கிறோம். 24-ந் தேதி காலை வாரணாசியை சென்றடைந்து விடுவோம். அன்றைய தினமே அங்கு எங்களுடைய வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இருக்கிறோம். பின்னர், அங்கு வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்வோம்.

வேட்பு மனு தாக்கலின் போது ஒரு சுயேச்சை வேட்பாளரின் பெயரை 10 பேர் முன்மொழிய வேண்டும் என்பதால், அதற்கான ஏற்பாட்டையும் செய்து இருக்கிறோம். அத்துடன் பிரசாரம் செய்வதற்காக 300 பேரையும் வாரணாசிக்கு அழைத்துச்செல்ல இருக்கிறோம்.

வாரணாசி செல்வதற்காக ரெயிலில் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவும் செய்யப்பட்டு விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கரூரில், அகில இந்திய கூடைப்பந்து இறுதிப்போட்டி இன்று நடக்கிறது
கரூரில் நடந்து வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு பேங்க் ஆப் பரோடா அணியும், சென்னை இந்தியன் வங்கி அணியும் மோதுகின்றன.
2. ரூ.68 கோடியில் கட்டப்பட்ட நெல் சேமிப்பு கிடங்கு செயல்பாட்டுக்கு வருமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
எருக்கூரில் ரூ.68 கோடியில் கட்டப்பட்ட நவீன தானியங்கி நெல் சேமிப்பு கிடங்கு செயல்பாட்டுக்கு வருமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
3. கெயில் நிறுவனத்துக்கு எதிராக பூச்சிக்கொல்லி மருந்துடன் விவசாயிகள் போராட்டம்
செம்பனார்கோவில் அருகே விளைநிலங்களில் குழாய்கள் பதிக்கும் கெயில் நிறுவனத்துக்கு எதிராக பூச்சிக்கொல்லி மருந்துடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ‘தற்கொலை செய்து கொள்வோம்’ என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. செல்லிக்குறிச்சி ஏரியை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
செல்லிக்குறிச்சி ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. அரிமளம் அருகே பெண்களுக்கான கபடி போட்டி
போட்டியில் சேலம், திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 14 அணிகள் கலந்து கொண்டன.