சாராயம் விற்ற கணவன்-மனைவி உள்பட 5 பேர் கைது 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


சாராயம் விற்ற கணவன்-மனைவி உள்பட 5 பேர் கைது 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 March 2019 11:00 PM GMT (Updated: 23 March 2019 7:28 PM GMT)

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற கணவன்-மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், 6 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் மதுகடத்தலை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மாவட்டம் முழுவதிலும் உள்ள சோதனை சாவடிகள் உள்பட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கீழ்வேளூர் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சாராயம் விற்பனை செய்த

ஆந்தகுடி ரோட்டு தெருவைசேர்ந்த சிவக்குமார் (வயது40) மற்றும் அவருடைய மனைவி கண்ணகி (35), சுப்பிரமணியன் மகன் சக்திவேல் (39), பெங்கடம்பனூர் காலனி தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மாதவன் (28), மில்லடி தெருவை சேர்ந்த ஜெகநாதன் மகன் சக்திவேல் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 250 லிட்டர் சாராயத்தையும், 6 மோட்டார்சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story