மாவட்ட செய்திகள்

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்து பெண் தற்கொலை போலீசார் விசாரணை + "||" + The woman suicide police are investigating the fire on a dispute with her husband

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்து பெண் தற்கொலை போலீசார் விசாரணை

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்து பெண் தற்கொலை போலீசார் விசாரணை
கொரடாச்சேரி அருகே கணவனுடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள முசிறியத்தை அடுத்த திட்டாணிமுட்டம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 35). இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார்.

இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்தநிலையில் மாரியம்மாள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் சேலத்தை சேர்ந்த வெற்றிவேல் என்பவரை 2-வது திருமணம் செய்து திட்டாணிமுட்டத்தில் தனது வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். வெற்றிவேல் வீட்டில் இருந்தபடியே தச்சு தொழில் செய்து வந்தார். வெற்றிவேலுக்கு மதுபழக்கம் இருந்தது. மேலும் அவர் தச்சுவேலை செய்து தருவதாக கூறி பலரிடமும் பணம் வாங்கி மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் பணம் கொடுத்தவர்கள் மாரியம்மாளின் வீட்டுக்கு வந்து பணம் கேட்டனர்.


இது குறித்து மாரியம்மாள் தனது கணவர் வெற்றிவேலிடம் கேட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த மாரியம்மாள் சம்பவத்தன்று வீட்டுக்கு வெளியே வந்து தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதில் உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாரியம்மாளின் உறவினர் கைலாசம் கொடுத்த புகாரின்பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. காட்டு யானை தாக்கி விவசாயி பலி: வனத்துறை விடுதியை சூறையாடிய கிராம மக்கள் 20 பேர் மீது போலீசார் வழக்கு
தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பலியானதை தொடர்ந்து வனத்துறை விடுதியை கிராம மக்கள் சூறையாடினார்கள். இது தொடர்பாக 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
2. நாகர்கோவிலில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீர் சாவு போலீஸ் விசாரணை
நாகர்கோவிலில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீரென இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. திருவாரூர் அருகே பயங்கரம்: எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை போலீசார் விசாரணை
திருவாரூர் அருகே எலக்ட்ரீசியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
5. வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் நஷ்டம்: ரெயில் என்ஜினில் பாய்ந்து வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை
வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் நஷ்டம் அடைந்ததால் நீடாமங்கலத்தில் ரெயில் என்ஜினில் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.