மாவட்ட செய்திகள்

கார் திருடிய வாலிபர் கைது + "||" + Car stole young man arrested

கார் திருடிய வாலிபர் கைது

கார் திருடிய வாலிபர் கைது
கார் திருடிய வாலிபர் கைது. பின்னர் அவரிடம் இருந்த காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்,

உடையார்பாளையம் அருகே உள்ள வானத்திரையான்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் மந்திரகுமார் மகன் வசந்தகுமார்(வயது 26). இவர் தனியார் கார் வாடகை நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வானத்திரையான்பட்டினத்தில் இருந்து பெரம்பலூர் வரை காரில் வாடகைக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு காரில் வந்து கொண்டு இருந்தார். மேலும் கடலூர் மாவட்டம் கார்குடல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(24) என்பவர் வசந்தகுமாரிடம் காரை வாடகைக்கு கேட்டு புதுச்சேரி சென்ற போது இருவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வானத்திரையான்பட்டினம் கிராமத்தில் உள்ள வசந்தகுமார் வீட்டிற்கு வந்து மணிகண்டன் தங்கியுள்ளார். பின்னர் நேற்று காலையில் வசந்தகுமார் எழுந்து பார்த்தபோது, மணிகண்டன் மற்றும் காரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த வசந்தகுமார் இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து காரை திருடிய மணிகண்டனை தேடிவந்தார். இந்நிலையில் நேற்று காலை தர்மபுரியில் காரை திருடி சென்ற மணிகண்டன் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமைச்சர் மகன் வீட்டில் நகை, பணம் திருடிய 3 பேர் கைது
திண்டுக்கல்லில், அமைச்சர் மகன் வீட்டில் 50 பவுன் நகை, பணத்தை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. நாகர்கோவிலில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட மரக்கடை ஊழியர் கைது
நாகர்கோவிலில் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட மரக்கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசு ஊழியர் உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
3. முன்விரோதம் காரணமாக ஆட்டோவை ஏற்றி டிரைவரை கொல்ல முயன்றவர் கைது
முன்விரோதம் காரணமாக ஆட்டோவை ஏற்றி டிரைவரை கொல்ல முயன்றவரை 10 கி.மீ. தூரம் விரட்டி சென்று சக ஆட்டோ டிரைவர்கள் மடக்கி பிடித்தனர்.
4. திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது
திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. மொபட்-மோட்டார்சைக்கிள் மோதல்: வாலிபர் பலி
தஞ்சை அருகே மொபட்-மோட்டார்சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.