லாரி டிரைவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த 2 பேர் சிக்கினர்


லாரி டிரைவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 24 March 2019 9:45 PM GMT (Updated: 24 March 2019 9:00 PM GMT)

சின்னமனூர் அருகே லாரி டிரைவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அல்லிநகரம்,

சின்னமனூர் அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் ராஜு(வயது 32). லாரி டிரைவர். இவர் கொடைக்கானலில் இருந்து தேனிக்கு லாரியில் வந்து கொண்டு இருந்தார். வழியில் அல்லிநகரத்துக்கு வந்தபோது அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி(37), மணிபிரபு(25), விவேக்(25) ஆகிய 3 பேர் லாரியை வழிமறித்து மது குடிக்க ராஜுவிடம் பணம் கேட்டனர். இதற்கு ராஜு மறுக்கவே 3 பேரும் சேர்ந்து அவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து ராஜு அல்லிநகரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி வழக்குப்பதிவு செய்து ராமமூர்த்தி, மணிபிரபு ஆகிய 2 பேரை கைது செய்தார். விவேக்கை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story